டில்லி

தென் மாநில ஆளுநர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதாக ஆங்கில ஏடான “எகனாமிக் டைம்ஸ்”  செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல ஆங்கில ஏடான “எகனாமிக் டைம்ஸ்” இன்று ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின் விவரம் வருமாறு :

”தென் மாநிலத்தில் உள்ள ஆளுநர் ஒருவர் மீது  பாலியல் புகார் உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.   அது குறித்து விசாரிக்க  உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.   அந்த புகாரில் ஆளுனர் மாளிகையில் பணி புரியும் பெண் ஒருவரிடம் ஆளுனர் தவறாக நடந்துக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை அளித்தவர் யார் என்பதும்  எந்த மாநில ஆளுநர் மீது இவ்வாறு புகார் எழுந்துள்ளது எனது குறித்தும் அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.    இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் அதற்கு ஏதும் சாட்சியங்கள் உளதா என்பது குறித்தும் உள்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.  இந்த புகார் உண்மை என கண்டறியப் பட்டால் அந்த ஆளுநரை பதிவி விலகச் சொல்லி அமைச்சகம் உத்தரவிட உள்ளது”  என அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு மேகாலயாவின் ஆளுநர் சண்முகநாதன் இதே போன்ற ஒரு புகார் எழுந்து விசாரணைக்குப் பின் கடந்த வருடம் ஜனவரி மாதம் அவரை அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  பதவி விலக்கியது குறிப்பிடத் தக்கது.