ட்டடாவா

னடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கனடா நாட்டு எல்லையைக் கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளுடன் ஒட்டாவாவில் உள்ள சாலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்தனர்.  எனவே  போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காவல்துறையினரின் தீவிர கைது நடவடிக்கைக்கு பிறகும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை.

லாரி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியதால் ஒட்டாவாவில் இருந்து நாடு முழுவதற்கும் போராட்டம் பரவியது.  இது பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அரசுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது.  லாரி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க வேண்டும் என கனடாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.  இதை ஒட்டாவாவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

அவர் நாட்டில் அவசர நிலை உனடடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் எனவும் அவர் கூறினார்.  இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் போராட்டக்காரர்களைச் சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டில் கனடாவில்  நிறைவேற்றப்பட்ட அவசரநிலை சட்டத்தை அமல்படுத்த கடினமான சட்ட தடைகளை கடக்க வேண்டும்.  மேலும் கனடா மக்களின் வாழ்க்கை, உடல்நலன் அல்லது பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான அவசர மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும். தற்போதைய சட்ட ரீதியான போராட்டங்கள் அவசரநிலையை அமல்படுத்தத் தகுதி பெறாது.

ஆகவே லாரி ஓட்டுநர்களின் போராட்டத்துக்காகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.