சென்னை,

மிழக சட்டசபையில் கடும் அமளிகளுக்கிடையே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக வணிக வரிதுறை அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார்.

ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழக சட்டசபையிலும்  ஜிஎஸ்டி தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 280 பக்கம் கொண்ட புத்தகமாக ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எடப்பாடி அரசின்  நம்பிக்கை வாக்கெடுப்பின் அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட பண பட்டுவாடா குறித்த வீடியோ வெளியானது குறித்து விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

ஆனால், இந்த விஷயம் கோர்ட்டில் இருப்பதாக கூறி சபாநாயகர் தனபால் விவாதிக்க மறுத்து விட்டார்.

இதன் காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் அமளியில் ஈடுபட்டனர். எம்எல்ஏக்கள் விற்பனைக்கு என்ற பதாதைகளை கையில் ஏந்தி கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், திமுக-வினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதாவை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.