புவனேஷ்வர்:

ங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபானி புயல் ஒடிசா கடற்கரையில் நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் அதிதீவிர புயலாக தீவிரமடைந்து ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது ஒடிசாவின் பூரி நகரிலிருந்து தென்மேற்கே 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல், 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல், நாளை  ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து கடலோரங்களில் உள்ள 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தற்காலிகமாக 11 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

ஒடிசாவை புயல் கடுமையாக தாக்கலாம் என கருதப்படும் நிலையில்,  அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 9 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விடுப்பில் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.