அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்திலுள்ள 60 அடி நீளமுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜுனாகத் மாவட்டத்தில் மலன்கா கிராமம் அருகே கட்டப்பட்ட அந்தப் பாலத்தின் இடிபாடுகளில் சில வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலமானது, ஜுனாகத் மாவட்டத்தின் மென்டர்டா நகரத்தை, சிங்கங்கள் வாழும் சரணாலயப் பகுதியான சசான்-கிர் என்ற இடத்தை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாகும்.

இந்தப் பாலம் இடிந்ததையடுத்து, அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதேசமயம், பயணிகளுக்கு மாற்றுப்பாதை திறந்துவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலத்தின் இடிபாடுகளில் சில கார்களும், இருசக்கர வாகனங்களும் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.