சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்மானம் நிறைவேற்றியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டதிற்காக தீர்மானத்தை கொண்டுவந்தார். அவர் அந்த தீர்மானம் பற்றி கூறுகையில், சேது சமுத்திர திட்டம் எதற்காக கொன்டு வரப்பட்டது. நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது, தற்போதைய நிலை என்ன என பல விஷயங்களை குறிப்பிட்டார். தற்போதைய பாஜக அரசு இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டாததால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும். என சேது சமுத்திர திட்டம் குறித்த தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுதொடர்பான விவாதத்தில் அதிமுக உள்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:
சேது சமுத்திரம் திட்டத்தை ஜெயலலிதா ஆதரித்து விட்டு பின்னர் எதிர்த்தார் என முதல்வர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதலமைச்சரின் தீர்மானத்தின் அடிப்படை யில் சாதகங்களை பேசி வலு சேர்க்க வேண்டும், ஆதரவு கேட்க வேண்டும், கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள் அதை பேசுவதற்கு இது நேரமல்ல திட்டத்துக்காக மணலை எடுக்கும்போது நகரும் என்பதால் பாதுகாப்பாக வெட்ட வேண்டும் என ஜெயலலிதா ள் கூறினார் என தெரிவித்தார்.
அதிமுக எடப்பாடி தரப்பு எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்:
ராமர் என்கிற கதாபாத்திரம் கற்பனையானது என அவைக்குறிப்பில் பதிவாகி உள்ளது வேதனை அளிக்கிறது என்றும், சுமார் 100 கோடி மக்கள் பின்பற்றுகின்ற ராமர் என்பவர் சினிமா கதாபாத்திரம் அல்ல, அவர் அவதார புரஷர் என கூறியதுடன், திட்டத்மதிற்கு எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என்பதை ஆராய வேண்டுமை. திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பதாகமீனவர்கள் கூறியதாகவும், திட்டம் குறித்து அந்த பகுதி மீனவர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியதுடன், இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
செல்வப்பெருந்தகை:
சேது சமுத்திர திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம். இதை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதுடன், இந்த திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவு உண்டு என்றார்.
பாஜகவின் நயினார் நாகேந்திரன்:
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும். எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடையமாட்டார்கள். ராமேஸ்வரம் கடற்பகுதி என்பது நீரோட்டம் அதிகமுள்ள பகுதி; அங்கு சில பிரச்சனைகள் உள்ளன. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம். ராமர் நடந்து சென்ற பாதைக்கு எந்த பாதிப்பும் சேது சமுத்திர திட்டத்தால் ஏற்பட கூடாது என்று கூறினார்.
பாமக எம்எல்ஏ ஜிகே மணி:
சேது சமுத்திர திட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு வளர்ச்சி திட்டம் என்றும், இது இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் என்பதை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பாமக எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் எனவும் கூறினார்.
சிபிஎம் எம்.எல்.ஏ. நாகை மாலி
தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தென் தமிழ்நாடு மக்களின் நீண்ட கால கனவாக இருப்பது சேது சமுத்திர திட்டம். அதனை ராமர் பாலம் என்று சொல்லி ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை மக்கள் நம்ப வேண்டும் என முயற்சிக்கிறார்கள். கட்டுக் கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது எனவும் கூறினார்.
மார்க்சிஸ்ட்:
தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் குறிப்பிட்டது.
ஜவாஹிருல்லா:
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள சிறுதுறைமுகங்கள் வளர்ச்சி அடையும். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய துறைமுகமாகும். இந்தியாவுக்கு கடல்சார் பாதுகாப்பு வலுவாக இருக்கும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
ஈஸ்வரன்:
சேது சமுத்திர திட்டம் வந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.
விசிக ஷாநவாஸ்:
சேது சமுத்திர திட்டத்தை இந்த காலத்தில் நிறைவேற்றவில்லை என்றால் எந்த காலகட்டத்தில் நிறைவேற்ற முடியும். முதலமைச்சர் போர் குணத்தோடு செயல்பட்டு வருகிறார் என விசிக ஷாநவாஸ் கூறினார்.
இதையடுத்து, தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.