வாஷிங்டன்:
காயம் காரணமாக அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ச்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் அறிவுரைப்படி, அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் விலக முடிவு செய்துள்ளேன். நான் உங்களை விரைவில் மீண்டும் சந்திப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் ஃபெடரர், நடால், டொமினி தீம் ஆகியோரும் காயம் காரணமாக விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel