கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழில்முறை கால்பந்து தொடர் ஆகும்.

2020-21ஆண்டிற்கான ஐ-லீக் தொடரைக் கோகுலம் கேரளா எஃப்சி அணி வெற்றி பெற்று அசத்தியது. இதுவரை வரை 21 கிளப் அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.

தற்போது அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து முதலமைச்சரின் பேரனும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக இருந்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.