சென்னை:

மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்-4 தேர்வுக்கு வரும் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், 6,491 பதவிகளுக்கான  குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கு முழு தேர்வு அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான குரூப்-4 தேர்வு செப் 1ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று ( ஜூன் 14ம் தேதி) முதல் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம் என்றும், பணி தொடர்பாக இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான பணிகள் 

விஏஒ (VAO). ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant). பில் கலெக்டர் (Bill Collector). தட்டச்சர் (Typist)
போன்ற பல்வேறு இளநிலை ஊழியர்கள் பணிகளுக்கு குரூப்-4 தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

 தேர்வுக்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:  14.06.2019

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 14.07.2019

தேர்வு தேதி:  செப்டம்பர் 1ந்தேதி (01-09-2019) 

கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்திலும் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.