சென்னை

மைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. கடந்த 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார்.

இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதை. முன்னிட்டு அவர், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் காணொலி காட்சி வழியே முன்னிறுத்தப்பட்டார். நீதிபதி அல்லி அவரிடம் எப்படி இருக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அவர், வலியுடன் இருக்கிறேன் எனக் கூறினார்.

பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.