வேலூர்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.   அ வர் மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

முதலில் இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பிறகு இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பிறகு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இன்று அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடியை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.