சென்னை: பல்வேறு ஊழல் வழக்குகள் காரணமாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 28ஆம் தேதி  நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் உடல்நலை பாதிப்பு, இருதய ஆபரேசன் பல நிகழ்வுகளை தாண்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இதற்கிடையில்,  சட்டவிரோத பணபரிமாற்ற தடை  சட்டத்தின் கீழ் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இன்று வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதன்பின் மீண்டும் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு,  எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜி மீதான  அமலாக்கத்துறை 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

இந்த நிலையில்,   செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதையொட்டி, அவரை காவல்துறையினர், எம்.பி – எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  காணொளி மூலம் ஆஜர்படுத்தினர்.  புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதையடுத்து, அவரது நீதிமன்ற காவலை ஆகஸ்டு 28ஆம் தேதிவரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  தொடர்ந்து 28ந்தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதன் காரணமாக 3 நாள் கழித்து 28ந்தேதி செந்தில் பாலாஜி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.