சென்னை:

செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழங்கிய  தொகுதி மேம்பாட்டு நிதியை திருப்பி அனுப்புவதா? என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளர்.

திமுக எம்எல்ஏ அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

 

[youtube-feed feed=1]