சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணமோசடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் கைது செய்யப்பட்டதும், நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றதர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கழுத்து, முதுகு தண்டு, பின் மண்டை வலி உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு. அனைத்து பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்து வர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில், தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதயவியல் துறை பிரிவு தலைவர் மனோகரன் தலைமை யில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், கால் தொடர்ந்து மரத்துப்போவதாக செந்தில்பாலாஜி தெரிவித்த நிலையில் மீண்டும் ஆஞ்சியோ மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன்14 இல் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜூன்22இல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.