பெங்களூரு
இஸ்ரோ வின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என்பதன் சுருக்கமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் செயற்கைக் கோள்களை அனுப்புவதில் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. சமீபத்தில் செலுத்தப்பட்ட சந்திரயான், மங்களாயன் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். இதன் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பதவி வகித்து வருகிறார்.
இவருடைய பதவிக்காலம் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைவதால் இவருக்குப் பதிலாக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவர் விண்வெளித்துறை செயலராகவும் பதவி வகிக்க உள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த பதவி வகிக்க உள்ளார். சோமநாத் தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பணி புரிந்து வருகிறார்.
கொல்லத்தில் உள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியில் பி டெக் பட்டம் பெற்ற சோம்நாத் விண்வெளித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் முடித்துள்ளார் இவர் ஏற்கனவே லிக்விட் ப்ரொபல்ஷன் சிஸ்டம் செண்டர் உள்ளிட்ட பல ராக்கெட் அமைப்புக்களில் பணி புரிந்துள்ளார். இஸ்ரோவில் 2003 ஆம் வருடம் நடந்த ஜி எஸ் எல் வி பணிகளில் பணி புரிந்துள்ளார்.