சென்னை:

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  அண்ணா பல்கலைக்கழகத் தின கிழ் இயங்ககும் அனைத்து  பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக்வும்,  அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் தேர்வுகள்  மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஊரடங்கு மே 3ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இ

இதையடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம்,  பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மற்றும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும், திட்ட மதிப்புகளும், வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகள் மீண்டும் தொடங்கும் தேதி, செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகள், திட்ட மதிப்புகள், வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்படுவதாகவும், தேர்வு குறித்த அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.