சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சமார் 48ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்க தமிழக அரசு சீனாவில் ஆர்டர் கொடுத்துள்ளது.  அதில் 24 ஆயிரம் கிட்கள் தமிழகம் வந்துள்ள  நிலையில், அதன் விலை என்ன என்பது குறித்து தமிழகஅரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்  என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் சில மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் ஊரடங்கு காரணமாக,  பெரும்பாலான மாநிலங்களில் நோய் தடுக்கப்பட்டு உள்ளது. தமிகத்திலும் நோய் தொற்று குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா ஆய்வு நடத்த தமிழகஅரசு ஆர்டர் செய்த 48ஆயிரம் ரேபிட் சோதனைக் கருவிகளில் 24 ஆயிரம் கருவிகள் மட்டும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்துள்ளது. இவைகள் இன்னும் முழுமையாக சோதனைக்கு பயன்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில்  ஆந்திரஅரசு, கொரிய நாட்டில் இருந்து லட்சக்கணக்கான ரேபிட் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்து, ஆய்வுகைளை மேற்கொண்டு வருகிறது. அதுபோல,  சத்தீஸ்கர் மாநிலத்திலும் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் சோதனைக்கருவிகள் மூலம் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ டிபி சிங் டியோ (Tribhuneshwar  Saran Singh Deo)  தென்கொரியாவில் இருந்து 75ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மாநிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒரு கிட்டின்  விலை ரூ.337 + ஜிஎஸ்டி என்று தெரிவித்து உள்ளார்.
மாநில அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியா, தென்கொரிய நாட்டு தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இவை வாங்கப்பட்டு உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.
ஆனால், தமிழகத்தில் 48ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள்  சீனாவுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, அதில் 24 ஆயிரம் கிட்கள் தமிழகம் வந்தடைந்துள்ள நிலையில்,  ஒரு கிட்டின் விலை என்ன என்பது குறித்து மாநில அரசோ, மாநில அரசுத்துறை அதிகாரிகளோ வாய் திறக்க மறுக்கிறார்கள்.
மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை தெரிவிப்பதில் மட்டும் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைத் செயலாளர் என ஆளாளுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு  செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழகத்திற்கு வாங்கப்பட்டுள்ள கொரோனா சோதனைக்கான ரேபிட் கிட்டின் விலை என்ன என்பது குறித்தும் மற்றும் யாரும் இதுவரை வாயை திறக்க  தெரிவிக்க மறுத்து வருகிறார்கள்…
சத்தீஸ்கர் மாநிலத்துல என்ன விலைக்கு வாங்கினாங்கன்னு வெளிப்படையா சொல்ற மாதிரி , தமிழ்நாட்ல யாராவது சொல்லி இருக்காங்களா?!
சத்திஸ்கர் மாநிலத்தைப்போல தமிழகஅரசும், ரேபிட் கிட்டின் விலை என்ன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
கொரோனா ரேபிட் கிட்டின் விலை விவரத்தை தமிழகஅரசு வெளியிடுமா?