மேலும் 12ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது…

Must read

சென்னை:

கொரோனா தொற்று பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட் ஏற்கனவே 24ஆயிரம்  கிட்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று மேலும் 12ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன. இந்த கருவிகள்  மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய் தொற்று தற்போது பிசிஆர் எனப்படும் சோதனைகள் மூலம் அறியப்பட்டு வரு கிறது. குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது.   இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் விரைவில் நோய் தொற்று அறிகுறி கண்டுபிடிக்கும் வகையினா ரேபிட் சோதனை கருவி சீனாவில் இருந்து வாங்க தமிழகஅரசு ஆர்டர் செய்திருந்தது.

அதன்படி 24 ஆயிரம் ராபிட் கிட்கள் நேற்று சென்னை வந்தடைந்தது. இதற்கிடையில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய  12 ஆயிரம் ராபிட் கிட்களும் சென்னை விமான நிலையத்தை வந்துடைந்துள்ளன. அந்த ராபிட் கிட்கள் அனைத்தும் தமிழக அரசின் குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இவைகள் மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஏற்கனவே வந்த ரேபிட் கருவிகளைக் கொண்டு சேலத்தில் கொரோனா சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article