பெரம்பலூர் :
பெரம்பலூர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்பிய நிலையில் கடந்த 2 நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலையில், அந்த மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகிறது.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரம்பலூரிலும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. டெல்லி இமாம் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவர் உள்பட காவலர் ஒருவருக்கும் கண்டறியப்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ளபாளையம் கிராமத்தில் வெளிநாட்டிலிருந்து (சார்ஜா)கடந்த மாதம் 19 ஆம் தேதி வீடு திரும்பியசேகர் என்பவரது 4 வயது மகன் சூர்யா என்பவருக்கும்,, V களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அதே கிராமத்தை சேர்ந்த முத்துக் கண்ணு என்ற காவலர் மற்றும் ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும்,  டெல்லி மாநாடு சென்று திரும்பிய அப்துல் ரஹ்மானின் மைத்துனரான முகமது ஷஃபீர் என்ற இஸ்லாமியருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.  இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று முற்றிலுமாக குணமானது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று அறிகுறி தென்படவில்லை. அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பட்டியலில் Nill – ஆகி உள்ளது. விரைவில் கொரோனா இல்லாத மாவட்டங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.