சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் வேட்பாளர்கள் சமூகநீதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தமுறை சமூக நீதி அடிப்படையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை,
“காங்கிரஸில் கடந்த முறை சிறுபான்மை மக்களுக்குத் தொகுதி ஒதுக்காமல் விடுபட்டுவிட்டது. ஆகவே இந்த முறை சிறுபான்மையினருக்குக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அதன்படியே கிறிஸ்தவருக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கேட்ட தொகுதி அமையவில்லை.
இந்தியா கூட்டணியில் ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் நவாஸ் கனி எங்களுடைய வேட்பாளர். மேலும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர். ஏற்கனவே வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராக அசன் இருக்கிறார். காங்கிரஸ் எல்லா தரப்பு மக்களுக்குமான இயக்கம் என்பதால் சமூக நீதி அடிப்படையிலேயே எங்கள் வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.”
என்று தெரிவித்துள்ளார்,