சென்னை,
சென்னை மக்களின் செல்பி மோகத்துக்கு இன்றைக்கு பெரிதும் இரையானது புதிய 2000 ரூபாய் நோட்டுகளே.
வங்கிகளில் இருந்து பணத்தை பெற்றவுடனே, தமது செல்போன் மூலம் ‘செல்பி’ எடுத்து, அடுத்த செகன்டே அதை சமூக வளைதளங்களில் ஏற்றி விடுகின்றனர்.
 
சென்னைவாசிகளான இளம் தலைமுறையினரின் இன்றைய பொழுதுபோக்கே இதுதான்.  இன்று வெளியான புதிய 2000 ரூபாய் நோட்டுடன் தன்னையும் சேர்த்து செல்பி எடுத்து, அதை உடனே சமூக வலை தளத்தில் ஏற்றி, அதற்கான கமென்ட்டுகளையும் போட்டு  வருகின்றனர்
இன்று பெரும்பாலான வலைதளங்களில் இவர்களின் புதிய பணத்துடனான செல்பி அங்கலாய்ப்புகளே அதிகமாக காணப்படுகின்றன.
selfie
வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இவர்களின், புதிய கரன்சியுட னான  போட்டோக்களே வைரலாக பரவி வருகிறது.
புதிய நோட்டை செல்பி எடுக்கும்போது, அவர்களின் முகத்தில் பரவசத்தை பார்க்க முடிகிறது. ஏதோ காணாததை கண்டதுபோல அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்ல என்று கூறலாம்.
புதிய நோட்டுகளை வாங்கிய பெரும்பாலோனோர், இந்த புதிய ரூபாயை உடனே செலவழிக்க மாட்டேன்…  பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்றே கூறி வருகிறார்கள்.
புதிய நோட்டை வாங்கியுவுடன், வங்கி வாயில் வைத்தே செல்பி எடுத்த கல்லூரி மாணவி ஒருவர் கூறியதாவது,
புதிய 2000 ரூபாய் நோட்டு பிங்க கலரில் இருப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. அதை தொடும்போது எனக்குள் பரவசம் உண்டாகிறது; பறப்பது போல் உள்ளது என்றார்.
மேலும் என்னிடம் உள்ள பழைய நோட்டுகளில் ஒரு 1000 ரூபாய் நோட்டை ஞாபகார்த்தமாக வைத்திருப்பேன். அதை மாற்ற மாட்டேன் என்கிறார் அந்த  கல்லூரி மாணவி.
இதுபோல், இன்று காலையே வங்கிக்கு சென்று புதிய நோட்டு வாங்கிய இளம் தொழிலதிபரான நாராயணன் என்பவர் கூறும்போது,
புதிய ரூபாய் நோட்டு பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவே இருக்கிறது. மேலும், இது பெண்களுக்கு பிடித்தமான பிங்க் கலரில் இருப்பதால், குடும்பத் தலைவிகள் அதை பத்திரப்படுத்துவதிலே கவனம் செலுத்துவார்கள். தற்போது இதை உடனே  செலவு செய்ய மனசு வரவில்லை என்றார்.