டில்லி:

செல்ஃபி மோகத்தால் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்களில் உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகம் என்று உலக அளவிலான ஆய்வில்  தெரிய வந்துள்ளது.

இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமையை சேர்க்காமல் சிறுமையை சேர்த்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் நமது நாடு உலக நாடுகளிலேயே முன்னிலை வகிக்க வேண்டும் என்றுதான்  ஆசைப்படுவது உண்டு. கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி வேலை வாய்ப்பு போன்றவற்றில் சிறந்திருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி பின்னோக்கியே செல்கிறது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வன்கொடுமைகள், சாதிமத வன்முறைகள் போன்றவைகSelfie death: India tops the worldள் இந்தியாவை பின்னோக்கியே அழைத்துச் செல்கிறது.

ஏற்கனவே, பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்று, ஒவ்வொரு இந்தியருக்கும் அவமானத்தை தேடித்தந்துள்ள நிலையில், தற்போது செல்ஃபி யால் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்களிலும் இந்தியா முதலிடத்தை பிடித்து சிறுமை சேர்த்துள்ளது.

நமது நாட்டு மக்களிடையே அதிகரித்து வரும் செல்ஃபி மோகம், பலரது மரணத்துக்கு காரணமாக விளங்கி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் முதல்  நவம்பர் மாதம்  2017 வரை உலகம்பூரா செல்ஃபி எடுக்கும் போது விபத்தில் சிக்கி பரலோகம் போனவங்க 259 பேர் என்று ஓய்வறிக்கை ஒன்று அறிவித்து உள்ளது.

இந்த 259 பேரில் 159 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ள துடன, இதில் இளம்பெண்களே அதிகம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.

வாழ்வில் உயர்த்தை நோக்கி செல்ல வேண்டிய இளம்தலைமுறையினர் செல்ஃபி மற்றும் பல வலைதளங்களின் மோகத்தில் சிக்குண்டு தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி  வருவது வருத்தத்திற்குரியது…