டில்லி

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு கூடுதல் மதிபெண்கள் வழங்கபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பள்ளி இறுதி மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஒரு சில நேரங்களில் கேள்விகள் மிக மிக கடினமாக அமைவது உண்டு. அதைப் போல் கேள்விகள் தவறாஅக கேட்கப்படுவது, பாடத்தில் இருந்து சற்று விலகி உள்ள கேள்விகள் போன்ற வகையான  கேள்விகளும் கேட்கப்படுவது உண்டு. இது போன்ற சமயங்களில் தேர்வு ஆணையம் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது வழக்கமாகும்.

ஆனால் இவ்வாறு கூடுதல் மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுவது கிடையாது. குறிப்பாக அந்த பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. அத்துடன் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற பிறகு மாணவரின் மதிப்பெண் 95% விட அதிகமாக இருக்க கூடாது என்னும் விதிமுறை உள்ளது. அதாவது ஒரு மாணவர் 89% பெற்றிருந்தால் அவருக்கு 6 கூடுதல் மதிபெண்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

நடந்து முடிந்த சி பி எஸ் இ பனிரண்டாம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு கனிதம், பவுதிகம் மற்றும் ரசாயனம் ஆகிய மூன்று பாடங்களிலும் கூடுதல் மதிப்பெண்கள் வ்ழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பாடங்களிலும் சேர்ந்து 32 கூடுதல் மதிப்பெண்கள் அதாவது சுமார் 11% மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

இதை போல மற்ற பிரிவுகளில் பொலிடிகல் சயின்ஸ் பாடத்தில் 6 கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் எகானாமிக்ஸ் பாயாலஜி போன்ற பாடங்களில்  5 கூடுதல் மதிப்பெண்களும் வழங்கபட்டுள்ளன. ஆனால் இதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.