க்னோ

க்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த போதும் பிரியங்கா காந்தி உ. பி. மாநில இடைத் தேர்தல் பணியை தொடங்கி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 2022 ல் உத்திரப் பிரதேச்த்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார். மேலும் அதற்காக பிரியங்கா வதேரா காந்தி மற்றும் ஜோதித்ராதித்ய சிந்தியாவை பணியில் நியமித்துள்ளதாகவும், இனி இம்மாநிலத்தில் கட்சி பலவீனமாக உள்ளது என்னும் நிலை வரமால் இருக்க அவர்கள் பணி புரிவர் எனவும் அவர் கூறி இருந்தார்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. உ. பி மாநிலத்தில் ஒரே தொகுதியில் மட்டும் வென்றது. அத்துடன் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இது காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் உ பி மாநிலத்தில் 12 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பல மூத்த தலைவர்கள் தோல்வியால் சோர்வுற்று இருந்த போதிலும் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இடைத் தேர்தல் பணியை தொடங்கி உள்ளார். அத்துடன் வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உ பி சட்டப்பேரவை தேர்தலுகான பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதையொட்டி பிரியங்கா காந்தி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள விவசாயிகள், தொழிலதிபர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து மாநில விவரங்களை கேட்டு வருகிறார்.