உலகம் முழுவதும் 38,59,282 பேரை இதுவரை பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் எனும் தொற்று நோய், சீனாவில் 2019 டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது.

2019 டிசம்பர் 31 ல் தான் சீனா இதனை ஒப்புக்கொண்டது, மேலும் 2020 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தான் தொற்று நோய் குறித்த   அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு.

சீனாவில் தொற்று பரவுவதற்கு சில வாரங்கள் முன்பாகவே அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்துக்கும்  மாடர்னா நிறுவனத்துக்கும் இடையே கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதற்கான ஆவணங்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் பாதிப்பைத் தரும்  நோய்கள் மையம் (என்.ஐ.ஏ.ஐ.டி – National Institute of Allergy and Infectious Diseases NIAID) மற்றும் மாடர்னா ஆகியவை இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் மூலக்கூறு தொடர்பான விவரங்களை வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் 12-டிசம்பர்-2019 அன்று கையெழுத்தாகியுள்ளதாக கிரேட் கேம் இந்தியா எனும் புவிசார் அரசியல் (GeoPolitics Journal) குறித்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோனி ஃபவ்ஸி

தேசிய மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபவ்ஸியை தலைவராக கொண்ட என்.ஐ.ஏ.ஐ.டி. க்கும் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திற்கும் இடையே உள்ள இந்த ஒப்பந்தத்தில் பல்கலைக்கழகம் சார்பாக ரால்ப் பாரிக் கையெழுத்திட்டுள்ளார்.

ரால்ப் பாரிக்

ரால்ப் பாரிக் மீது சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டார் என்ற குற்றச் சாட்டு நிலவி வருகிறது.

மேலும், அந்தோனி ஃபவ்ஸியை அதிபரின் மருத்துவ ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான கோரிக்கை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் இந்த ஒப்பந்த விவகாரம் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.