பெங்களூரு

ர்னாடக அரசு பேருந்துகளில்  பயணிகள் அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்னாடகா மாநிலம் பெங்களூருவில் மாநில போக்குவரத்து அதிகாரிகள் இன்று சாலை விபத்துக்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.   நெடுஞ்சாலையில் பேருந்துகள் செல்லும் போது ஓட்டுனர்கள் திடீரென பிரேக் பிடிக்கும் போது பலர் கிழே விழுவதாகவும் அதில் சிலர் மரணம் அடைவதாகவும் கூறப்பட்டது,   இதை தடுக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

அந்த ஆலோசனைகளை ஆராய்ந்த கர்னாடகா மாநில போக்குவரத்து கழகம், “கர்னாடகா மாநிலத்தில் சாலை விபத்துக்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 270 பேர் மரணம் அடைகின்றனர்.   அதில் திடீரென பிரேக் பிடிக்கும் போது கீழே விழுந்து மரணம் அடைவோரின் தொகை கணிசமாக உள்ளது.   எனவே அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும்”  என உத்தரவிட்டுள்ளது.