திருவனந்தபுரம்:
‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
கேரள சட்டசபையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ., பிரக்கால் அப்துல்லா, கோழிக்கோட்டில், முஸ்லிம் லீக் தொண்டர் கொல்லப்பட்டது சம்பந்தமாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

பினராயி - எஸ்டிபிஐ - ரமேஷ் சென்னிதலா
          பினராயி –                                எஸ்டிபிஐ அமைப்பு-                    ரமேஷ் சென்னிதலா

அதற்கு பதிலளித்த கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான முதல்வருமான பினராயி விஜயன்: அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாத எஸ்.டி.பி.ஐ., எனப்படும், ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா’ என்ற அமைப்பு,  தனது தொண்டர்களுக்கு கொலை செய்யும் பயிற்சியை அளிக்கிறது என்று பகிரங்கமாக சட்டசபையில் குற்றம்சாட்டினார்.
மேலும் கோழிக்கோட்டில், முஸ்லிம் லீக் தொண்டர், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அரசு மிகவும் தெளிவாக உள்ளது. இந்த கொலை குறித்தும், எஸ்.டி.பி.ஐ., அமைப்பு குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படும்.   இந்த அமைப்பினருக்கு, காவல் துறையில் சிலர் உதவி செய்வதாகவும் புகார் வந்து உள்ளது.  இது விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பது குறித்து   ஆலோசிக்கப்படும் என்றார்.
இதற்கு பிறகு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா: மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்த பின், கேரளாவில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும், 40 கொலைகள், 48 கொலை முயற்சிகள், 400 பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை தடுக்க, போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசு மீது குற்றம் சாட்டினார்.