புதுடெல்லி:
காவிரி நதியின் குறுக்கே புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற அனுமதி இல்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

 தமிழக. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் மேகதாது மந்திரி சஞ்சீவ்குமார்:
 ஏ.கே.செல்வராஜ் M.P       காவிரி – மேகதாது பகுதி         மத்தியமந்திரி சஞ்சீவ்குமார்

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ஒப்பந்தம் கோரி உள்ளதாக, அதிமுகவை சேர்ந்த தமிழக. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் மேல்சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமான பதில் அளித்த மத்திய நீர்வளத் துறை இணை மந்திரி சஞ்சீவ்குமார்:
காவிரி குறுக்கே புதிய திட்டங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது என்று கர்நாடகாவுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதnk மத்திய அரசு இதை வலியுறுத்தி கர்நாடகாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில் “கர்நாடக அரசு தமிழக அரசுடன் தன் திட்டங்கள் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகே புதிய கட்டுமான திட்டம் பற்றி தீர்மானிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மேற்பார்வைக்குழு ஆய்வு செய்யாதவரை மேகதாதுவில் கர்நாடக அரசு எந்த புதிய திட்டத்தையும் தொடங்க கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இருந்தாலும், புதிய நீர்மின் திட்டத்துக்காகவும், குடிநீர் திட்டத்துக்காகவும் மேகதாதுவில் தடுப்பணை கட்டுவோம் என கர்நாடகா அரசு பிடிவாதமாக கூறி வருகிறது.