ஏளூர்:
ந்திராவில் பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்த சம்பவம் தாமதமாக தெரிய வந்தது. எனினும் வயிற்றில் வலியுடன் அவதிப்பட்டு வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கத்திரிக்கோலைக் கண்டுபிடித்தனர். இந்த எக்ஸ்ரே-வை ஊழியர்கள் சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதனை அறிந்த உயர் அதிகாரிகள் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டனர்.