உலோக ஹைட்ரஜன் தொழில்நுட்பம்: விண்வெளிப் பயண புரட்சிக்கு வித்திடும்

ஹைட்ரஜன் வாயுவைத் திட உலோகமாக மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். அவர்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

இறுதியாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ரசவாத விஞ்ஞானிகள், சிறிய அளவு திட ஹைட்ரஜன் உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களின் அறிவியல் கட்டுரை , பிரபல அறிவியல் ஆராய்ச்சி இதழான “ சயின்ஸ்”ல் வெளிவந்துள்ளது.
தத்துவார்த்த ரீதியாக, உலோக ஹைட்ரஜன் அதிவிரைவு கணினிகள், அதிவேக மிதக்கும் ரயில்கள் மற்றும் தீவிர திறமையான வாகனங்கள் உருவாக்கவும் இயக்கவும் பயன்படும். மேலும், மின்சாரம் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட எதையும் மேம்படுத்த, வியத்தகு தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப் படுகின்றது.

மேலும் அது மனித சமூகம், முன் எப்போதும் இல்லாத வகையில் விண்வெளியில் ஆராயச்சியை மேற்கொள்ள வழிவகுக்கும்.
விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ‘அடுத்தபடியாக ஹைட்ரஜன் உலோகம், சாதாரண வெப்பநிலையில் நிலையானதாய் இருக்குமா என்பதை நிறுபிக்க வேண்டும்.

பேராசிரியர் ஐசக் சில்வேராவும் டாக்டர் ரங்கா டயஸ் ஆகியோர் இந்த புரட்சிகரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சில்வேரா கூறுகையில், இது உயர் அழுத்த இயற்பியல் துறையில் ஒரு அட்சயப் பாத்திரம் ஆகும். இது பூமியில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் உலோக ஹைட்ரஜன் மாதிரி ஆகும். எனவே இப்பொழுது நீங்கள் பார்ப்பது உலகில் இதுவரை இருந்திராத பொருள்.” என்றார்.

இந்த உலோக சிறிய துண்டினை வெறும் கண்களால் பார்க்கமுடியாது. இதனை இரண்டு வைரங்கள் வழியாகப் பார்க்க முடியும்.
இந்த உலோகம் பூமியின் மையத்தில் காணப்படுகிற அழுத்தத்தின் அளவை விட மிக அதிகமான உயர் அழுத்தத்தில் திடமாய் உள்ளது. ஆனால் அடுத்த சில வாரங்களில், கவனமாக அழுத்தத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு கோட்பாட்டின் படி, உலோக ஹைட்ரஜன் அறை வெப்பநிலையில் நிலையாக இருக்கும் – பேராசிரியர் சில்வெரியா கூறினார்.

கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் விலக்கப்பட்ட பிறகு. இந்த ஹைட்ரஜன் உலோகம் திடமாய் இருக்கும். இது வைரம் தயாரிக்கப்படும் முறையைப் போன்றது ஆகும். பொதுவாய் கிராஃபைட் மீது கடுமையான வெப்பம் மற்றும் அழுத்தம் செலுத்தப்படும் போது வைரங்கள் உருவாகின்றன. அதன்பிறகு அழுத்தம் மற்றும் வெப்பநில சகஜ நிலைக்கு கொண்டுவரும்போது வைரம் திடமாகவே இருக்கும்.” என பேராசிரியர் சில்வெரியா விளக்கினார்.

மின்சாரம் பயன்படுத்தப்படும் அனைத்து துறைகளிலும் வியத்தகு புரட்சியும் இதன் மூலம் ஏற்படுத்தமுடியும்.

“மின் ஆற்றல், ஒரு இட்த்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின்கம்பி மூலம் கடத்தப்படும்போது, 15 சதவீதம் இழப்பு ஏற்படுகின்றது. இந்த திட ஹைட்ரஜன் கொண்டு மின்கம்பி தயாரிப்பதன் மூலம் அத்தகைய இழப்பினை முற்றிலும் தடுக்க முடியும்” என்றார்.

பேராசிரியர் சில்வெரியா, “மேலும், உலோக ஹைட்ரஜன், சிறந்த ராக்கெட் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்யும். தர்போதைய எரிபொருளைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் எரிபொருள் தயாரிக்க முடியும். இதன்மூலம், சூரிய மண்டலத்தை ஆராயும் நமது முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். எளிதாக நம்மால் வெளிப்புற கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள முடியும்” என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

மனிதக் குல வரலாற்றில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள உலோக ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சி முழு வெற்றிப்பெற்று, சமூக முன்னேற்றத்திற்கு பயன்படும் என எதிர்பார்க்கலாம்.

 

Credit : http://www.independent.co.uk/news/science/hydrogen-metal-revolution-technology-space-rockets-superconductor-harvard-university-a7548221.html