டில்லி

டில்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதுவும் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.

கடந்த 9 ஆம் தேதி முதல் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

நாளை முதல் டில்லியில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டில்லியில் காற்றின் தரம் சற்று அதிகரித்ததையடுத்து பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.