லக்னோ: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 15 வரை பள்ளிகள் மூடப்படும் என மாநிலஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ஆக உள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது செயலில் உள்ள வழக்குகள்  22,23,018 ஆக உள்ளது. இதுவரை  3,73,70,971 பேர் குணமடைந்துள்ளதுடன்,  4,91,127 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 15ந்தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் வரும் 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதிவரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவ்னிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.