சென்னை

மிழக அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான சீருடை மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது லைட் பிரவுன் மற்றும் மெரூண் கலரின் சீருடை உள்ளது.   தமிழக அரசு 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக  வழங்கி வருகிறது.   அதே நேரத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சொந்தச் செலவில் சீருடை வாங்கி வருகின்றனர்.

தற்போது பள்ளிக் கல்வி இயக்குனரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், “வரும் 2018-19 கல்வி ஆண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் சீருடை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிறத்தில் பேண்ட்டும் இளம் சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டையும்,  மாணவிகளுக்கு இதே உடையுடன் சாம்பல் நிற கோட்டும் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருநீல நிறத்தில் பேண்ட், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும்,  மாணவிகளுக்கு இத்துடன் கருநீல நிறத்தில் கோட் எனவும் அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல இந்த மாணவர்கள் தங்கள் சொந்தச் செலவில் சீருடைகளை வாங்கி உபயோகப் படுத்தவேண்டும்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.