சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அறவழிப் போராட்டம் தொடங்கி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்,   திரைத்துறையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்தும் ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இதை ஒட்டி இன்று திரைத்துறையினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சிவகுமார்,  சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பங்கு கொண்டுள்ளனர்.  தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

அப்போது நாசர், “காவிரி மேலாண்மை அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்தி போராட்டம் நடத்துவது நமது கடமை.   மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல் படுத்தக் கூடாது.   தற்போது திரையுலகம் பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளது.  இருப்பினும் மக்களுக்காக போராட வேண்டியது அவசியம் என்பதால் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்”  என தெரிவித்தார்.