குஜராத்:
குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேசமயம் கரோனாவிலிருந்து 534 பேர் குணமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி 1,497 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் குஜராத்தில் 100க்கு கீழ் கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஜூலை 15 முதல் 12ஆம் வகுப்புக்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

மேலும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்லூரிகளும் ஜூலை 15ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் பள்ளி, கல்லூரிகளில் வருகைப்பதிவு என்பது கட்டாயம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.