சென்னை

கொரோன நிவாரண நிதியாகப் பிரதமர் மோடி ஆரம்பித்துள்ள பி எம் கேர்ஸ் நிதிக்கு தணிக்கை கிடையாது எனத் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி உள்ளார்.

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.  இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார்.   அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பில் பழனிவேல் தியாகராஜன், “தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம். இதன்மூலம் எளிதாக நிவாரண நிதியைச் செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதில் மே 6க்கு முன் வந்த நிதியைத் தனிக் கணக்காகவும், மே 7க்கு பின் வந்த நிதியைத் தனிக் கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.472 கோடி வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளதுபட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்ஆனால் பி.எம்கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாதுஅதற்குத் தணிக்கையே கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய பேட்டியில் முதல்வர் பொது நிவாரண நிதியை பி.எம்-கேர்ஸ் நிதி உடன் ஒப்பிட்டு பேசி தாக்கி உள்ளார். இதற்கு முன் ஜிஎஸ்டி குழுவில் நேரம் ஒதுக்கவில்லை என்றும் நிதியைத் தமிழகத்திற்குத் தரவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடந்த சில மாதம் முன்பு தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.