சென்னை: வரும் சனிக்கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி என வியாழன், வெள்ளி இரு நாட்கள் விமுறை வருவதால், சனிக்கிழமை பெரும்பாலான அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால், பள்ளிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதன் காரணமாக,   தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி ஆணையர் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், செப். 14 மற்றும் 15 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை செப்.16 அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி செப். 16 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.