தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய வலியுறுத்தியதால், தற்கொலை செய்துகொண்ட வீடியோ வைரலான நிலையில், தஞ்சையில் பள்ளி மாணவி மத மாற்றம் வற்புறுத்தலால் தற்கொலை செய்யவில்லை என மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்து உள்ளார். மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி தனியார் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்தவ கல்வி நிறுவனமான அந்த பள்ளி, லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்தியது. ஆனால், லாவண்யா அதை விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த பள்ளி நிர்வாகம், பொங்கல் விடுமுறையில் அவரை வீட்டுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. மேலும் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் சமையல் செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி லாவண்யா அங்குள்ள தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிகழ்வு கடந்த 9ந்தேதி அன்று நடைபெற்றுள்ளது. ஆனால், மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், பள்ளி வார்டன் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி, தங்களை கூட்டிச்செல்லுமாறு குறினார். இதையடுத்து மாணவியின் மகள் முருகானந்தம், மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து, மாணவியின் உடல்நிலை மோசமானதால், 15ம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், தன்னை மதம் மாற சொல்லி வலியுறுத்திய தாகவும், ஆனால், தான் அதை ஏற்க மறுத்ததால், விடுதி அறைகள், சமையல் பாத்திரங்கள் என பல்வேறு வேலைகளை கொடுத்து, தன்னை வார்டன் கொடுமைப் படுத்தியதால், மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்ததாக, டாக்டர்களிடம் மாணவி கூறினார். இதுதொடர்பான வீடியோயும் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியிடம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, வார்டன் சகாயமேரி, 62, என்பவரை கைது செய்தனர். மாணவியின் உடல், நேற்று பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து, அங்கு திரண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் ஊர்மக்கள், மற்றும் பாஜகவினர், மாணவியின் இறப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் தந்தை முருகானந்தம், பா.ஜ.,வினருடன் சென்று, எஸ்.பி., ரவளிப்பிரியாவிடம் அளித்த மனுவில், ‘என் மகளை சிஸ்டர் ராக்கிளின்மேரி, வார்டன் சகாயமேரி இருவரும் மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் பா.ஜ., மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், ‘மாணவியை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார்’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தஞ்சை மாவட்ட எஸ்.பி ராவலி ஐபிஎஸ். தஞ்சாவூர் மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற விவகாரம்தான் காரணம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில அரசியல் தலைவர்களும் இதே விஷயத்தை குறிப்பிட்டு உள்ளனர். அதன்படி அந்த மாணவி மரணமடையும் முன் இது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் உறுதிப்படுத்த முடியாத செய்தி ஒன்று ஊடகங்களில் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
ஆனால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரை யாரும் மதமாற்றம் செய்ய முயன்றதாக எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம். மாணவியின் அடையாளங்களை வெளியிடுவது தவறு. சட்ட வழக்கு, பாதுகாப்பு தேவையான குழந்தைகள், 18க்கு வயதுக்கு கீழ் இருக்கும் victim தொடங்கி யாருடைய புகைப்படம், பெயரையும் வெளியிட கூடாது. மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மதமாற்றம் இல்லை மாணவியின் பெயர், பள்ளி பெயர் கூட வெளியிட கூடாது. அவர்களின் சொந்த ஊர் பெயரையும் வெளியிட கூடாது. பெற்றோர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…