சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. . 6, 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. தொடங்க பள்ளிகளில், அதாவது 1முதல் 5வகுப்பு வரையிலான தொடக்க வகுப்புகளுக்கு 19ந்தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன. முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டு உள்ளது. வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில்,  பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜன.2-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.