சென்னை: புறநகர் பகுதியான திருமழிசை அருகே அமையவுள்ள ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கான பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடிய பேருந்துகள் வசதிக்காகவும் 24.8 ஏக்கரில் ரூ.336 கோடி மதிப்பில்  சென்னையின் 4வது புறநகர் பேருந்து நிலையம் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு  வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானம் நடைபெற்று வரும் இந்த பேருந்து நிலையம்,  2022, அக்டோபர் முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமான, கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், திருமழிசை அருகே சென்னை பெருநகர வளர்ச்சிக்  குழுமத்தின் கீழ் அமையவுள்ள பேருந்து நிலையம் 2023-க்குள் தயாராகும் என அதை ஆய்வு செய்த அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

வண்டலூர், திருமழிசை புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? சட்டப்பேரவையில் தகவல்…