காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 13ந்தேதி முதல் விடுமுறை! தமிழகஅரசு அறிவிப்பு

Must read

சென்னை:

த்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதியாக,  காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லுரி களுக்கு ஆகஸ்ட் 13ந்தேதி முதல் 16ந்தேதி வரை  விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தொடர்ந்து, 16, 17 சனி ஞாயிறும் விடுமுறை என்பதால், தொடர்ந்து 6 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரும், 16 மற்றும்  17ந்தேதி மட்டும் விடுமுறை விடப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது 13ந்தேதி, 14ந்தேதி, 15ந்தேதி சுதந்திர தினம், மற்றும்16ந்தேதி என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனத்துக்காக வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வருவதால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய 3 தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17ம் தேதி அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  எனவே, பக்தர்களின் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், பக்தர்கள் ஓய்வெடுக்கவும், பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது குறித்தும்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுரிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய 3 தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இடையில் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினம் அன்றும் விடுமுறை. அத்துடன்  17, 18ந்தேதி சனி ஞாயிறு வருவதால் அன்றும் விடுமுறையாகிது. இதன் காரணமாக , அங்குள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு 13ந்தேதி முதல் 18ந்தேதி  6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

More articles

Latest article