மிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது,  எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்து, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி  சாதனை படைத்துள்ளார்.

முதன்முதலாக அண்ணாதுரையின் ஆட்சியின்போது, கருணாநிதி போக்குரவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் தனியார் வசம் இருந்த பேருந்துகள்  நாட்டுடைமையாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தமிழகத்துக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தன.

சமூக வளர்ச்சி,  தொழிற்துறை வளர்ச்சி, விவசாயத்துறை வளர்ச்சி, உயர்கல்வி வளர்ச்சி,  தமிழ் வளர்ச்சி உள்பட பல துறைகள் உருவாக்கப்பட்டு தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது.

கருணாநிதியின் ஆட்சியில்தான் கை ரிக்சாக்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு பதிலாக சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கப்பட்டன.

குடிசைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக  குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தி, ஏழை மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.

சுதந்திர தினத்தன்று மாநிலத்தில்  கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

பிச்சைக்காரர், தொழு நோயாளிகளுக்கு  மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான்.

கண்ணொளி திட்டம் கொண்டு வந்து, வயதான முதியவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.

பெண்களுக்கு சொத்துரிமை.

ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.

மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.

ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம்

கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம்

கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் பெற  உழவர் சந்தைகள்

அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் ஐக்கியமுடன் வாழும் வகையில் சமுத்துவபுரம்

பள்ளி மாணவர்களுக்கு  இலவச பஸ் பாஸ்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம்

அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் உள்பட ஏராளமான நலத்திட்டங்கள் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டன.