டில்லி

ச்சநீதிமன்றத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே அதாவது மே மாதம் 8 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  தினசரி கொரோனா  பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.   தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் அதிகரித்து இதுவரை 1.76 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1,97,880 பேர் உயிர் இழந்து தற்போது 28.75 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா மேலும் பரவுவதைத் தடுக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.  அவ்வகையில் உச்சந்நிதிமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையில் சிறப்புக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கோடை விடுமுறையை ஒரு வாரம் முன்பே தொடங்க கோரிக்கை விடப்பட்டது.    இதை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 

அதன்படி மே மாதம் 14 ஆம் தேதி தொடங்கப்பட இருந்த கோடை விடுமுறை வரும் மே மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.   இந்த கோடை விடுமுறை வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது  

Corona, SC, Summer holidays, started, one week ahead,