டில்லி

ன்கொடுமை சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தினால் தலித் மற்றும் பழங்குடியினரின் நம்பிக்கையும் நல்லொழுக்கமும் பாதிப்பு அடையும் என உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைக்கு எதிரான சட்டம் எதிரிகளை பழிவாங்க மட்டுமே பயன்படுத்தப் படுவதாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.   அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் விசாரணை இல்லாமல் கைது செய்வது, ஜாமீன் மறுப்பு ஆகியவற்றை மாற்றியது.   இதனால் அந்த சட்டம் நீர்த்துப் போய்விட்டதாக நாடெங்கும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது.

மத்திய அமைச்சர்கள், மாநில சட்டப்பேரவைகள் உள்பட பலரும் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தனர்.   இது குறித்து நாடெங்கும் பெரும் ஆர்ப்பட்டமும் ஒருநாள் முழுக் கடையடைப்பும் நடைபெற்றன.  கடையடைப்பு அன்று ஏற்பட்ட கல்வரத்தில் எட்டு பேர் மரணம் அடைந்தனர்.

இது குறித்து மத்திய அரசு, “உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை சட்டத் திருத்தம் நாட்டையே உலுக்கி உள்ளது.  தலித் மற்றும் பழங்குடி மக்கள் அரசு தங்களை காப்பாற்றும் என நம்பி இருந்ததை இந்த சட்டதிருத்தம் பாதித்துள்ளது.   அதனால் ஏற்பட்ட பயத்தினால் அவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போது நல்லொழுக்கத்தை இழந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த வன்முறையில் 8 பேர் மரணம் அடைந்தது இதனால் தான்” என உச்ச நீதிமன்றத்துக்கு மனு அளித்துள்ளது.

இதற்கு உச்சநீதிமன்றம் பதில் அளித்துள்ளது.  மேலும் தவறான காரணங்கள் கூறி உச்சநீதிமன்ற தீர்ப்பை வளைக்க வேண்டாம் என அரசுக்கு தெரிவித்துள்ளது.