டில்லி

ட்டு மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்கக் கோரிய மனுவை உச்சநீதி மன்றம் நிராகரித்துள்ளது.

சமீபத்தில் எட்டு மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினர் என அறிவிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லட்சத்தீவு, மிஜோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இந்த அறிவிப்பு தேவை என அந்த மனுவில் கூறப்பட்டது.  வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவரால் இந்த மனு அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும் மனுவில், “மேற்கூறிய மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பினும், அவர்களுக்கு சிறுபான்மையினருக்கான சலுகைகள் கிடைப்பதில்லை.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 68.30% இஸ்லாமியர்கள் உள்ளனர்.  ஆனால் அங்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இந்து மாணவர்களுக்கு அது கிடைப்பதில்லை. இது போல மேலே உள்ள 8 மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்த போதிலும் அவர்கள் சிறுபான்மையினருக்கான சலுகைகள் பெறுகின்றனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.   மனுவை விசாரித்த பின் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  நாடு முழுமைக்குமான கணக்கெடுப்பை ஆதாரமாகக் கொண்டு தான் சிறுபான்மையினர் என அறிவிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.