டில்லி

மோடி மற்றும் அமித்ஷா குறித்த தேர்தல் விதிமுறை மீறல் புகார்களை மே மாதம் ஆறாம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.    தேர்தல் பிரசாரத்தில் பல தேர்தல் விதிமுறைகள் மீறல் நடந்துள்ளதாக பிரதமர் மோடி மீதும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீதும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இது குறித்த வழக்கு ஒன்றை காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தது.    இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அப்போது உச்சநீதிமன்றம் மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதி மீறல் குறித்து வரும் 6 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவு அறிந்த பின்னர் வழக்கு விசாரணை நடைபெறும் எனக் கூறிய உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை வரும் மே மாதம் 6 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளது.