சிதம்பரத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்

Must read

டில்லி

முன்னாள் அமைச்சர் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து 140 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் ஐ  என் எக்ஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி அளித்த மனுவை டில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதையொட்டி நேற்று முன் தினம் ப சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மே முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி உள்ளிடோர் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க மறுத்தது. . மற்றும் இந்த வழக்கு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பார்வைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அவர்  அப்போது அயோத்தியா ராமர் கோவில் வழக்கு விசாரணையில் இருந்துள்ளார். எனவே மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறையில் வெகு நேரம் காத்திருந்த போதும் விசாரணை நடைபெறவில்லை. அன்று இரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றம் சிதம்பரம் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து சுமார் 140உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து அளித்த மனுவில் மூத்த வழக்கறிஞர்கள் சி யு சிங்,மீனாக்‌ஷி அரோரா மற்றும் ஹரீஷ் ராவல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்து இட்டுள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் சங்கம் தலைமை நீதிபதிக்குப் புகார் அளிக்க வேண்டும் எனப் போராட்டக் கூட்டத்தில் வலியுறுத்ஹ்டபட்டது.

அந்த மனுவில், “இந்த வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினரின் முன் ஜாமீன் மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேறு சில மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு எதிராக உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் முன் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாஅரிக்கஉச்சநீதிமன்றம் மறுத்துள்ளதில் இருந்து சட்டம் மற்றும் ஜனநாயகம் பாரபட்சமாக உள்ளது என முடிவுக்கு வர வேண்டி  உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article