ஸ்ரீஹரிகோட்டா:

ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சுற்றி வரும் நிலையில், நிலவை முதன்முதலாக  படம் பிடித்து அனுப்பி உள்ளது. அந்த படத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. தொடர்ந்து முழுவதும் இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியது.

சந்திரயான்2, நிலவை எடுத்த முதல் புகைப்படம்

வெற்றிகரமான புவி வட்டப்பாதையை சுற்றி சந்திரயான்2 தற்போதுநிலவின் சுற்று வட்டப்பாதை யில் சுற்றி வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணில் தரையிறங்கும் என கணிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது முதன் முறையாக சுமார் 2650 கி.மீ உயரத்திலிருந்து விக்ரம் லாண்டரால் நிலவை புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 பூமிக்கு அனுப்பியுள்ளது

இந்த புகைப்படத்தை இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் விக்ரம் லாண்டரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சந்திரனின் உள்ள மரே ஓரியண்டேல் பேசின் மற்றும் அப்பல்லோ பள்ளங்கள் படத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்து உள்ளன.