டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான  கொலீஜியம் ஐந்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும், மூன்று மூத்த நீதிபதிகளை மூன்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக உயர்த்தவும் பரிந்துரைத்து உள்ளது.

அதன்படி ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற பரிந்துரைத்துள்ளது.

அதுபோல, ராஜஸ்தான் மாநில தலைமை நீதிபதியாக, ஜம்முகாஷ்மீர் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல் மாற்றவும்,  ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி ஜஷ்வந்த், ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணி உயர்த்தவும், கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, பி.பி.வலலேவையும், ஜேகே உயர்நீதிமன்ற நீதிபதி அலி மெகமத் மார்கிரேவை, ஜேகே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைத்துள்ளது.

மேலும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்குமார் மிஸ்ராவை ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தக்கும்,  கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரன் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜார்கண்டன் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அபரேஷ்குமார் சிங் திரிபுரா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிடை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளது.