டெல்லி: ஓரின சேர்க்கையாளரான வழக்கறிஞர் சவுரப் கிர்பால்-ஐடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கொலீஜியம் என்ப நீதிபதிகள் தேர்வுக் குழு. இந்த குழுவின் தலைவராக இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இருப்பார். அவருடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர். இந்த கொலிஜியம் குழுவினரே, மாநில உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்துக்கான நீதிபதிகளை தேர்வு செய்து.
அதன்படி, தற்போது பிரபல வழக்கறிஞர் சவுரப் கிர்பாலின் பெயரை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்து மத்திய அரசு அனுப்பி உள்ளது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதும், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதலுக்கு பிறகு, சவுரப் கிர்பால் பணி நியமனத்துக்கான உத்தரவு வெளியாகும்.
வழக்கறிஞர் சவுரப் கிரிபால் ஓரின சேர்க்கையாளர். இவரை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் முதல் ஓரின சேர்க்கையாளர் என்ற பெயருக்கு சொந்தமான சவுரப் கிரிபால் . நாட்டின் முதல் ஓரின சேர்க்கையாளர் நீதிபதி என்ற புகழுக்கும் சொந்தமாகிறார்.